Thursday 3 June 2010

பாராட்டு

என் கவிதைகள் உங்களை
நிறைவான பரவசத்தில்
ஆழ்த்தவில்லை !ஆனால்
உங்கள் கவிதைகளுக்கு
முகம் தெரியாத யாரோ
ஒருத்தியின் பாராட்டுக்கு
ஏனோ காத்திருக்கின்றீர்கள் ...!!

எதிர் காலம்

கடத்து விட்ட காலமதில்
கிடைத்ததெல்லாம் துன்பம்தானோ .............
பிறக்கயிருக்கும் ஆண்டுகளிலும்
புதிர் போடும் கேள்விதானோ .........
நேற்று ஆராத சோகத்தில் ......
இன்று இயலாத கோலத்தில் .......
நாளை எட்டாத துரத்திலா ??
தாழ்வுற்று தலை குனித்து
நிற்கும் எனக்கு
வாழ்வளிக்குமா ??வாழ்வையே அழிக்குமா??
என் வாழ்கை ....!!!

பூர்த்தி

உன்னால்
புகழப்பட்ட பின்னே
என் ....
படைப்புகள்
பூர்த்தியடைகின்றன ....!!

புண்ணியம்

வாசலில் கையேந்தும்
குருட்டு பிச்சைகாரரை
தாண்டிச் சென்று
உள்ளே உண்டியலில்
போடும் ஒரு ரூபாயால்
என்ன புண்ணியமோ??

பாதை

வரமா .....சாபமா ......
தவமா ....தண்டனையா ....
புதிரா ....விடையா ......
புரியாவிட்டாலும் கூட
சுவாரசியமானதாய் தான்
உள்ளது என் வாழ்கை !!

விடியல்

போர்வையை உதறி தள்ளு
சோம்பலை சுட்டுத் தள்ளு
கலப்படமில்லாத காற்றுடன்
காத்திருக்கிறது ......காலை.....
வெளியில் வா .....நீ
வெளிச்சத்துக்கு வா ....!!

பெண்ணடிமை

நல்லது இதுதான் என
நயமாய் திணிப்பது கூட
பெண்ணடிமையின் ஒரு
பரிமானமல்லவா !!
எனக்கு நல்லது இதுதானென
தீர்மானிக்கும்
தனி சுதந்திரம்
தருவ தென்று நமக்கு !!