Thursday, 3 June 2010

பாராட்டு

என் கவிதைகள் உங்களை
நிறைவான பரவசத்தில்
ஆழ்த்தவில்லை !ஆனால்
உங்கள் கவிதைகளுக்கு
முகம் தெரியாத யாரோ
ஒருத்தியின் பாராட்டுக்கு
ஏனோ காத்திருக்கின்றீர்கள் ...!!

எதிர் காலம்

கடத்து விட்ட காலமதில்
கிடைத்ததெல்லாம் துன்பம்தானோ .............
பிறக்கயிருக்கும் ஆண்டுகளிலும்
புதிர் போடும் கேள்விதானோ .........
நேற்று ஆராத சோகத்தில் ......
இன்று இயலாத கோலத்தில் .......
நாளை எட்டாத துரத்திலா ??
தாழ்வுற்று தலை குனித்து
நிற்கும் எனக்கு
வாழ்வளிக்குமா ??வாழ்வையே அழிக்குமா??
என் வாழ்கை ....!!!

பூர்த்தி

உன்னால்
புகழப்பட்ட பின்னே
என் ....
படைப்புகள்
பூர்த்தியடைகின்றன ....!!

புண்ணியம்

வாசலில் கையேந்தும்
குருட்டு பிச்சைகாரரை
தாண்டிச் சென்று
உள்ளே உண்டியலில்
போடும் ஒரு ரூபாயால்
என்ன புண்ணியமோ??

பாதை

வரமா .....சாபமா ......
தவமா ....தண்டனையா ....
புதிரா ....விடையா ......
புரியாவிட்டாலும் கூட
சுவாரசியமானதாய் தான்
உள்ளது என் வாழ்கை !!

விடியல்

போர்வையை உதறி தள்ளு
சோம்பலை சுட்டுத் தள்ளு
கலப்படமில்லாத காற்றுடன்
காத்திருக்கிறது ......காலை.....
வெளியில் வா .....நீ
வெளிச்சத்துக்கு வா ....!!

பெண்ணடிமை

நல்லது இதுதான் என
நயமாய் திணிப்பது கூட
பெண்ணடிமையின் ஒரு
பரிமானமல்லவா !!
எனக்கு நல்லது இதுதானென
தீர்மானிக்கும்
தனி சுதந்திரம்
தருவ தென்று நமக்கு !!

Wednesday, 19 May 2010

பகல் ஒரு பைத்தியம்
உள்ளதையெல்லாம்
உளறிக்கொட்டுகிறது ......
இரவு ஒரு இரகசியம்
எல்லாவற்றையும்
மூடி மறைகிறது ....ஆனால்
நானோ ஓர் அதிசயம்
மறைபதுமில்லை
எதையும் உறைப்பதும்மில்லை!!

மாலை

நினைவுகளில்
நீர் மாலை
கோர்க்கத் தெரிந்த
எனக்கு நிஜத்தில்
பூமாலை தொடுக்க தெரியவில்லை

Monday, 17 May 2010

சேரும் முகவரி சரியில்லை
அனுப்பிய முகவரியும்
அதிலில்லை
ஒரு கடிதம்
அனாதியாகிவிட்டது !!

பிரிவு

பிரிவு என்பது
நிரந்தரமல்ல
மரணமும் கூடத்தான் !!

நீ


எனக்காக நீ கொஞ்சம் கண்ணீர் உகுப்பாயானால் உனக்காக நான் என் கண்களையே உகுப்பேன் ....!!!

Thursday, 13 May 2010

வேண்டாம் மனிதர்களே .....
சின்னச் சின்னதாய் இந்த ......
சவுக்கடிகள் வேண்டாம் ......
இதழ்கள் ஒவ்வொன்றாய்
கிள்ளி இந்த மலருக்கு
மரண தண்டனை வேண்டாம்.......
வளர்த்திருக்கும் விரல்களில்
மலரை வேரோடு கிள்ளிவிடுங்கள்
மரணங்கள் ஒரு நிமிடத்தில்
நிகழ்துவிட!!!

Wednesday, 12 May 2010


வாழ்வில் உதிரும் சொட்டுகள்
ஈரமானவை.......இனிப்பானவை .....
ஆனால் இங்கு
இரும்பை விட கனமாய் .....
நெருப்பை விட எரிவாய் .....
ரோஜாவை பறித்து
ஒவ்வொரு இதழாய்
உரித்து ....உதிர்த்து....
கசக்கினால் அந்த
மலரின் வலியும் என்....
மனதின்[மலரின்] வலியும் ஒன்றாய் ....!!!

Sunday, 9 May 2010

மலர்

ரோஜா செடியில்
நான் மலர்களாய்
அல்ல..........
முட்களாய் !!

Saturday, 8 May 2010

மனிதன்

மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன்
எல்லாம் மனிதன் இல்லை
முயற்சி செய்துக்கொண்டிருபவன்
மட்டும்தான் மனிதன் !!

Thursday, 6 May 2010

paruvam oru sirahu


பருவம் ஒரு சிறகுதான் ...
வானில் பறக்க
வழிகள் இல்லாத போது
சிறகே ஒரு சுமைதான்!!